Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன ஒற்றுமையை வலுப்படுத்துவில் உறுதியாகவுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தங்களுடைய அதிகாரத்தை எவ்வாறாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக காய்களை நகர்த்திக்கொண்டுள்ளார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினரை நசுக்கிய முன்னைய அரசாங்கத்துக்கு பாடம் புகட்டுவதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுமார் 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நோயாளர் விடுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, செவ்வாய்கிழமை (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தில் அவர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு சிறுபான்மைச் சமூகத்தினர் ஆதரவு வழங்கி நல்லாட்சி அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும்' என்றார்.
'நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தை பூர்த்திசெய்யும்வரை யாராலும் அதைக் கவிழ்க்க முடியாது. நல்லாட்சிக்கு துணை நிற்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே உள்ளது' என்றார்.
'தற்போது நாட்டில் காணப்படும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை முடிவுறுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் நான் பாரிய முயற்சியை மேற்கொண்டுவருகிறேன். இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால், இம்மாகாணத்தில் வேலை இன்றி எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, அனைவரும் என்னுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள். கிழக்கு மாகாணத்தை குட்டிச் சிங்கப்பூராக மாற்றுவதற்கு நான் பாடுபடுவேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago