2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'இயற்கை முறையான விவசாயச் செய்கையை மேற்கொள்ள வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இயற்கை முறையில் விவசாயச் செய்கையில் ஈடுபடுத்த விவசாயிகளை வழிப்படுத்தும்போதுதான் பாரிய நோயில் இருந்து எம்மைப் பாதுகாக்க முடியும் என உதவி விவசாயப் பணிப்பாளர் (வலயம் தெற்கு) செல்வி எம்.சிவஞானம் தெரிவித்தார்.

வேளாண்மைப் பயிரில் தாக்கும் கபில நிறத்தத்தியினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப விழிப்புணர்வு செயலமர்வும் ஆலோசனையும் மண்டூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில்  விவசாய போதனாசிரியர் ரி.கோசல ரூபன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மண்டூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பகுதி விவசாயிகள் கடந்த காலங்களில் கபில நிறத்தத்தியின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், அதிலிருந்து இன்னும் மீளமுடியாதவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலைமை இனிவரும் காலங்களில் ஏற்படாது விவசாயிகள் தங்களது நெற்பயிர்களைப் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் தெரிந்திருக்கக்கூடிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும்

கபில நிறத்தத்தியின் தாக்கம் ஏற்பட்டவுடன் விவசாயிகள் அதிசக்திவாய்ந்த இரசாயனங்களை விசிறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். எனவே அவ்வாறு இல்லாது இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்தால் பாரிய நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்கமுடியும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X