2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இறப்புச் சான்றிதழை ஏற்கமாட்டேன்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எனது கணவர் இறந்துள்ளாராயின், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். எந்தவித நட்டஈட்டையும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனக்கு தேவை பறிக்கப்பட்ட உயிர். இதனை விட நான் வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பிள்ளைக்கு அப்பா என்று சொல்வதற்கு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்' என புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, இன்று வெள்ளிக்கிழமை மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '2008.02.20 அன்று எனது கணவர் கொழும்பில் வைத்தே  வெள்ளை வானில் கடத்தப்பட்டார். அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோட்டாபய  ராஜபக்ஷ. அரசாங்கந்தான் எனது கணவரை கடத்தியது. எனது கணவர் என்ன குற்றம் செய்தார்? அதனை வெளிக் கொண்டு வாருங்கள்? அவர் எந்தவிதமான குற்றச்செயலிலும் ஈடுபட்டவர் அல்ல. மாறாக, காப்புறுதி நிறுவனம் ஒன்றிலையே கடமையாற்றி வந்தார்.

எனது கணவர் எவ்வாறு, எதற்காக காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும். எனது கணவர் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால், இதனை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே ஒருபோதும் நட்டஈட்டையோ,  மரணச்சான்றிதழையே நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X