Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்,வா.கிருஸ்ணா
எங்கள் உறவுகள் இந்த மண்ணில் செய்த தியாகங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம். பிரிந்த உயிர்களின் ஆத்மா சாந்திக்காக கார்த்திகை 27இல் நினைவுகூர்ந்து மரியாதை செய்வோம். எங்களை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை 27 மாவீரர் நினைவு தினம் சனிக்கிழமை (27) மாலை மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை நீர்த்த எமது மாவீரர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம். இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். யாரும் தடுக்க முடியாது.
இந்த நாட்டில் நடைபெற்றது ஒரு கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் போராகக் கருதுகிறது. இந்த நாட்டுக்குள்ளே ஏற்பட்ட கிளர்ச்சியில் ஒரு இனம் அதிகமானளவில் கொல்லப்பட்டிருக்கிறது. தமிழினம் உரிமைக்காக போராடி பல உயர்த் தியாகங்களை செய்துள்ளது. இதை நினைவுகூர வேண்டிய கடமை எமக்கு உண்டு.
மாவீரர் தினம் என்பது இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போராட்டத்தை தூண்டுவது அல்ல. ஆனால் அவ்வாறு கருதுகிறார்கள். இந்த எண்ணப்பாங்கிலிருந்து விடுதலையடைய வேண்டும். இந்த நாட்டிலே தமிழ் மக்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என உணர்ந்து அந்த தியாகங்களை மதிக்க முன்வர வேண்டும்.
எங்கள் உறவுகள் இந்த மண்ணில் செய்த தியாகங்களை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம். பிரிந்த உயிர்களின் ஆத்மா சாந்திக்காக கார்த்திகை 27இல் பிரார்தனை செய்து வருகின்றோம். இது எங்கள் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் மரியாதை தொடர்ந்தும் அனுஷ்டிப்போம் எங்களை யாரும் தடுக்க முடியாது.
இந்த மாவீரர் தின நன்னாளிலே சிறைகளில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் உறவுகளை மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யுங்கள். இல்லாவிடின் அரசாங்கத்துக்கு வழங்கும் சகல ஆதரவுகளையும் விலக்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிப்பதா என்று சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
1 hours ago