2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'கொக்கட்டிச்சோலை மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கணக்கிட்டுக் கூறமுடியாது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்ற கொடிய போரின்போது எமது நாட்டிலுள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை விட இந்த கொக்கட்டிச்சோலை பிரதேச மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும்,கஷ்டங்களையும் கணக்கிட்டுக் கூறமுடியாது என ஜக்கிய தேசியக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் உள்ள சிறுவர் மகளீர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கிவிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மாவட்டத்தில் உள்ள தாய், தந்தைகளை இழந்து சிறுவர்,மகளீர் இல்லாங்களில் இருக்கின்ற மாணவர்களின் நிலமைகளை கேட்டறிந்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) மாலை நடைபெற்றது.இன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் "போர் நடைபெற்ற காலத்தில் இந்தப் பாடுவான்கரை பிரதேசங்களுக்கு எந்த உணவுப்பொருட்பளையோ,வீட்டுப்பொருள்களையோ கொண்டுவர முடியாத நிலமை. நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த நிலைமை மாறி புதியதொரு தஷாப்தத்திற்குள் நாங்கள் எல்லோரும் காலடி எடுத்து வைத்துள்ளோம். இன்று பாருங்கள் இந்தப்பிரதேசத்தில் இந்த சிறுவர் இல்லத்தில் ஒரு அமைச்சருடன் இருந்து பேசுகின்றோம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க விடையம். பாருங்கள் எங்களது இந்த அமைச்சரின் கணவர் ஒரு அமைச்சராக இருந்தவர் கடந்த காலங்களில் எமது தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்திலே  துணிச்சலாக நின்று குரல் கொடுத்த ஒரு மனிதர் அவரைக்கூட இழந்து விட்டோம் இன்று. அவரின் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவரின் மனைவி தற்போது ஒரு அமைச்சராக இருக்கின்றார். அவரிடம் சென்று உங்களது தேவைகளை குறைபாடுகளை பெற்றுக்கொள்ள முடியும்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X