Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட படுவான்கரைப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள், மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
செங்கலடி –பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர்த்; தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
காந்தி பூங்காவுக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம்வரை சென்றனர். இதன்போது, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மக்கள் கையளித்தனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், 'வரட்சியான காலத்தில் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதுடன், 6 கிலோமீற்றருக்கும் அப்பால் சென்றே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் நிலைமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கரடியனாறுக் கிராமம் முதல் மங்களகமக் கிராமம் வரையான மக்கள் தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதாகவும் குளிப்பதற்குக் கூட பஸ்களில் செங்கலடிப் பிரதேசத்துக்குச் சென்று குளிக்கின்றோம்' என்றனர்.
'வரட்சியான இக்காலத்தில் பிரதேச சபையால் நாளாந்தம் பவுசர் மூலம் வழங்கப்படும் தண்ணீர்; போதாமையாகவுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், தொழிக்குச் செல்வோர் உட்பட அனைவரும் பாரிய சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஆகவே, எங்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனவும் அவர்கள் கூறினர்.


19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago