Suganthini Ratnam / 2016 ஜூன் 29 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட மீராகேணி ஸம்ஸம் மீள்ளெழுச்சிக் கிராமத்தில் மீள்குடியேறிய 52 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துத் தருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் அக்குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து முதலமைச்சரின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன் பாவாவிடம் மீள்ளெழுச்சிக் கிராம ஸம்ஸம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று புதன்கிழமை கடிதம் கையளித்துள்ளனர்.
அக்கடிதத்தில், '1985 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாகி, சொந்த முயற்சியில் மீள்குடியேறிய ஸம்ஸம் மீள்ழுச்சிக் கிராமத்தைச் சேர்ந்த 52 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி ஓலைக் குடிசைகளில் வாழ்கின்றனர். மழைக்காலத்தில் அவர்களின் குடிசைகளில் ஒழுங்குகின்றது. இவர்களுக்கு மலசலகூட வசதியும்; இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago