Suganthini Ratnam / 2016 ஜூலை 28 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான உணவுப்பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரை 20,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் ஒரு சரீரப்பிணையிலும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, புதன்கிழமை (20) விடுவித்துள்ளார்.
மேலும், குறித்த வர்த்தக நிலையம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
காத்தான்குடிப் பிரதேச செயலகத்துக்கு குறித்த வர்த்தக நிலையத்தால் ஒப்படைக்கப்பட்ட போஷாக்கு உணவுப்பொதிகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தமை தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனிடம் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் முறைப்பாடு செய்தார்.
இதனை அடுத்து, குறித்த வர்த்தக நிலையத்தில் புதன்கிழமை திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து காலாவதியான உணவுப்;பொருட்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றினர்.
போஷாக்கு உணவுப்பொதிகளில் வைப்பதற்கு தயாராகவிருந்த காலாவதியான உணவுப் பொருட்களான சோயாமீட், கடலை, நெத்தலிக்கருவாடு, மாசிக்கருவாடு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், கிறின்பீன்ஸ், மிக்ஸர் வகைகள், கச்சான், அரிசி, பழப்புளி, யாம் உள்ளிட்டவற்றையே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றினர். அத்துடன், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரையும் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
கர்ப்பிணிகளுக்கான போஷாக்கு உணவுப்பொதிகளை குறித்த வர்த்தக நிலையமூடாக இனிN;மல் விநியோகிக்க முடியாதென்பதுடன், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago