Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி இன்று (16) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல பீடங்களைச் சேர்ந்த மூவின மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தபோது, 'இப்பல்கலைக்கழகத்தில் கற்பதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து பல மாணவர்கள் வருகை தருகின்றனர். இம்மாணவர்கள் வேறு இடங்களில் தங்குவதால், பல அளெகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், இம்மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்படும் 4,000 ரூபாய் கொடுப்பனவு, வெளியிடங்களில் வாடகைக்கு தங்குவதால் போதாமல் உள்ளது. வெளியிடங்களில் தங்கும்போது, 5,000 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இராண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்றனர்.
இது தொடர்பாக மேற்படி பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு போதுமான விடுதிகள் இல்லை. மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு முழுமையான விடுதி வசதி வழங்கப்படும்' என்றனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago