2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 45 ஆடைத்தொழிற்சாலைகள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

 

 உள்ளூராட்சிமன்றங்கள் வெறுமனே குப்பைகளை அகற்றுகின்ற சபை என்ற நிலையிலிருந்து மாற்றமடைந்து நிதியீட்டுகின்ற நிறுவனங்களாக மாறவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றங்களுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சிமன்றப் பிரிவுகளிலும் 45 ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
கடந்த ஆட்சிக்காலத்தின்போது போதிய நிதியொதுக்கீடின்றி இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபையின் நிர்வாகக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பூரணப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

 

ஏறாவூர் நகர சபைக்கு இரண்டு மாடிகளைக்கொண்ட  நிர்வாகக் கட்டடம் அமைப்பதற்கென உலக வங்கியின் புறநெகும திட்டத்தின்கீழ் 2013ஆம் ஆண்டு நான்கு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனபோதிலும் கடந்தகால நிர்வாகிகள் உலக வங்கியின் விதிமுறைகளுக்கு மாறாக மூன்று மாடிகளை அமைப்;பதற்கு வேலைத்திட்டங்களை மேற்கொண்டதன் காரணமாக மிகுதி நிதியினைப் பெற்றுக்கொள்ள முடியாது நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. இதனால் நகர சபையின் பணியாளர்கள் தொடர்ந்தும் சிறிய கட்டடமொன்றில் மிகுந்த சிரமத்துடன் கடமையாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
 
இந்நிலையினைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண  உள்ளூராட்சி அமைச்சு நிதியிலிருந்து தற்போது இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து கட்டடத்தின் பணிகளை பூரணமாக நிறைவுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இதேநேரம் நகரசபையின் திண்மக்கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு இந்நிகழ்வில் இலவசமாக சீருடைகளும் வழங்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X