2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாணத்திலிருந்து 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்க முடியும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
நாட்டில் மின்சக்திக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படுமாயின், சோளர் சக்தி மூலம் 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை கிழக்கு மாகாணத்திலிருந்து வழங்க முடியும் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
'எதிர்கால கனவுகள் -2016 விஞ்ஞானம் சார் கல்விக் கண்காட்சி' செங்கலடி மத்திய கல்லூரி வாளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'எமது நாட்டில் சரியான முறையில் திட்டமிட்டு மின்சாரக் கட்டமைப்பை உருவாக்காமல் விட்டால், எதிர்காலத்தில் பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
 
ஒவ்வொரு மாகாண சபைகளிலும் 50 மெகாவோட்ஸ் சோளர் மின்சக்தி தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுமாயின், அதற்கு நாங்கள் தயார்' என்றார்.  
 
'மேலும், தற்போதைய கல்வி நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். நாங்கள் எவ்வாறு தொழில்நுட்பத்துக்குச் செல்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாகவே நாங்கள் இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X