Suganthini Ratnam / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட முதலைக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (02) பொலிஸார்; ஆஜர்படுத்தினர்.
இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், முதலைக்குடாப் பிரதேசத்தில் கசிப்பு விற்பனை பற்றிய தகவலையும் அவர் வழங்கினார்.
இதனை அடுத்து, நீதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
4 minute ago
9 minute ago
18 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
18 minute ago
18 minute ago