2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடத்தப்பட்ட சிறுவன் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாவடிவேம்புக் கிராமத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 11 வயதுச் சிறுவன் ஒருவன், கரடியனாறுக் காட்டோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் விதுஷன் (வயது 11) என்ற இச்சிறுவன், பாடசாலையில் நடைபெற்ற மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு,  கொழும்பு –மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை வழியாக சனிக்கிழமை (30) முற்பகல் 11 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவ்வீதியால் வெள்ளை வானில் வந்தவர்கள், இச்சிறுவனை வானுக்குள் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றுள்ளனர்.

இச்சிறுவன் கடத்தப்படுவதைக் கண்டவர்கள், பெற்றோருக்குத் தெரியப்படுத்தினர். இந்நிலையில், பொலிஸாருக்கு பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இச்சிறுவனை பொலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில், கரடியனாறு காட்டோரத்தில் இச்சிறுவன்  கடத்தப்பட்டவர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளான். அழுதுகொண்டு நின்ற சிறுவனை சிலர் காப்பாற்றி, கரடியனாறுப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வைத்தியப்; பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில்; பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X