Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் கவிதை பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் மட்.பட்டிருப்பு - களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து, தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன் தெரிவித்தார்.
இப்பயிற்சியின் பின்னர் எதிர்கால சந்ததியினராகிய மாணவர்கள் கவிதைத் துறையில், திறமைகளை வெளிக்கொணரவும் துறைசார்ந்த போட்டிகளில் பங்குகொள்ளவும் இக்கவிதைப் பயிற்றிப் பட்டறை உதவியாக அமையும் எனவும் கலாசார உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago