2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சொந்தமாக 'ஒரு வீடு கூட இல்லை'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபையின் தொழிலாளிகளாக கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிவந்த தமக்கு குடியிருப்பதற்குச்  சொந்தமாக ஒரு வீடு இல்லை என ஏறாவூர் 4ஆம் குறிச்சி ரீசி குவார்ட்டஸில் வசிக்கும் சுகாதாரத் தொழிலாளர்கள்; தெரிவித்தனர்.

கடந்த 60 வருடங்களாக ஏறாவூர் நகரசபையின் சுகாதாரத் தொழிலாளிகளாக தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஏறாவூர் சுகாதார நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ரீசி குவார்ட்டஸ் 60 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. சிறிய ஓர் அறையைக் கொண்ட இந்த குவார்ட்டஸ் அவர்களின் குடியிருப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குவார்ட்டஸில் மொத்தமாக 10 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன. இதில் 5 பேருக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களும் உள்ளன.

மேலும், கடந்த 60 வருடகாலமாக எமது இந்த குவார்ட்டஸ் எதுவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது சிதைவடைந்த நிலையில் காணப்படுவதுடன், மழைகாலத்தில் ஒழுக்கு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

எனவே, இது விடயத்தில் ஏறாவூர் நகரசபை கவனம் செலுத்தி தாங்கள் குடியிருக்கும் குவார்ட்டஸை தங்களுக்கு பெற்றுத்தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X