2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறையிலிருந்து வெளியேறினார்கள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர்; பூ.ஹரனுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நேற்றுப் புதன்கிழமை மாலை மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்கள்.

2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தன் 2015.10.23 அன்று கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து  அவரது சகோதரர் பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டு, அவர்கள்  இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்திருந்தனர்.  

இந்நிலையில், பிணைக்கான நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டதை அடுத்து நேற்றுப் புதன்கிழமை இவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.  மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்;கு இவர்கள் இருவரும் அழைத்துவரப்பட்டு அங்கு கையொப்பமிட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தலா 50 ஆயிரம்  ரூபாய் ரொக்கப்பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவிக்கையில், 'சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விடுதலை செய்யப்படல் வேண்டும்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X