2025 மே 08, வியாழக்கிழமை

'சமூக சேவையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமூக சேவையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்பதுடன், சமூகத்தின் வலுவூட்டலுக்கும் இளைஞர்கள்; பங்களிப்புச் செய்ய வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் இளைஞர் குழுக்களை அங்குரார்;ப்பனம் செய்யும்  நிகழ்வு, காத்தான்குடியிலுள்ள அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்த நிறுவனமானது பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வி, சுகாதாரம், வாழ்வதாரம், தொழிற்கல்வி ஆகியவற்றிலும் இளைஞர், யுவதிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்;களுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

இளைஞர்களையும் இந்த நிறுவனத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு இளைஞர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.எமது அமைப்பானது பெண்கள் மத்தியில் பல்வேறு சமூகப்பணிகளை செய்வதுபோன்று, எதிர்காலத்தில் இளைஞர்;கள் மத்தியிலும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X