Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையில் சமூக நீதியையும் சமாதானத்தையும்; கொண்டு வருவதற்கு பெண்கள் பங்களிப்புச் செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த பல தசாப்தங்களாக இலங்கைப் பெண்கள் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ளனர். சமத்துவம், உரிமைகளுக்கான கௌரவம் போன்றவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியுள்ளனர். இலங்கையில் சமூக நீதியினையும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தினையும் கொண்டுவருவதற்கு பெரிதும் பெண்கள் பங்களிப்புச் செய்துள்ளனர்
இன்று பெண்கள் கொள்கை, சட்டம், ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் உருவாக்குவதற்காக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். இவ்வாறு பரந்துபட்ட சமூக இயக்கங்களி;ல் பிரிக்க முடியாத பகுதியாக பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்;டு வருகின்றன.
இன்று பெண்களுக்கான உரிமைகளும், பாதுகாப்பும் சட்டத்தில் தெளிவாக இருக்கி;ன்றபோதிலும், நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான துஷ்;பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் பரவலாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதனைச் செய்கின்றவர்கள் ஏதோவொரு வகையில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இவர்களுக்கான கடுமையான தண்டனைகள் எதி;ர்காலத்தி;ல் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கி;ன்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் வங்கிகள் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அவர்கள் இயங்கி வந்தாலும் இந்த வக்கி;க் கடன் பொறிக்குள் அனேகமான குடும்பப் பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
வீட்டுக்கடன் என்றும் இன்னோரன்ன கடன்களையும் இலகுவாக எடு;த்துக் கொள்;கின்றனர். அத்துடன் தொலைக்காட்சிப்பெட்டி, சலவை இயந்திரம், குளி;ர்சாதனப்பெட்டி போன்றவற்றை மாதாந்த கட்டு;த் தொகையி;ல் பெற்றுக் கொள்கி;ன்றனர்;. இக் கடனை உரிய காலப் பகுதி;க்குள் கட்ட முடியாது தற்கொலை முயற்சியையும் செய்து வருவதை அண்மைக்காலங்கங்களி;ல் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்விடயங்களி;ல் பெண்களைப் பயன்படு;த்துவது ஆண்களாகவே இருக்கி;ன்றனர்.
ஒருபக்கம் பெண்களுக்கு இருக்கி;ன்ற உரிமைகளை பாதுகாக்க போராடுகி;ன்ற வேளை அடிமட்டத்திலுள்ள பெண்களி;ன் அன்றாடப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு அனைவர்களும் முன்வர வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago