2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'திட்டமிடாத அபிவிருத்திகளால் வளங்கள் வீணாகியுள்ளன'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்படாத  அபிவிருத்தி வேலைத் திட்டங்களால் வளங்கள் அழிவடைந்து காணப்படுகின்றன என அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தூரநோக்குடன் சுற்றுலாத்துறை, ஏனைய தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதலீட்டார்களுக்கான மாநாடு, மட்டக்களப்பில் டேபா மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  'முதலீட்டுத் துறையானது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிக முக்கியமானது ஆகும். முதலீட்டாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்களுடைய தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். எமது அமைச்சானது அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தயாராக உள்ளது.
மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் இந்த மாகாணத்தில் முதலீட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மும்முரமாகச் செயற்படுகின்றார்' என்றார்.  

'முதலீட்டாளர்களின் பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் புதிய முதலீட்டாளர்களின் உருவாக்கத்துக்கும் முதலீட்டாளர்களுக்கான ஒன்றியம் உதவி செய்யும்' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X