Niroshini / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் தெரிவித்தார்.
புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர் ஒன்று கூடல் காத்தான்குடி மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பிராந்திய ஊடகவியலாளர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ் மொழியுடன் ஏனைய பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊடகவியலாளர்களுக்குள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் காணப்பட வேண்டும்.சிறந்ததொரு ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஊடக நெறி பயிற்சிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
காத்தான்குடி மீடியா போரம் பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரு சிறந்த அமைப்பாக காணப்படுகின்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் மூலம் பலதரப்பட்ட ஊடக கருத்தரங்குகள் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அதில் ஒரு அங்கமாகவே காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள அங்கத்தவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் நோக்கில் இந்த ஒன்று கூடலும் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
இந்த ஒன்று கூடலில் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அன்வர்,அதன் உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, பொருளாளர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago