2025 மே 08, வியாழக்கிழமை

'தொழில் தகைமையுடைய நிலையங்களாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

பல்கலைக்கழகங்கள் எல்லாம்  கல்வித் தகைமையுடைய சான்றிதழ்களை வழங்கும் நிலையங்களாக மட்டுமல்லாது தொழில் தகமையுடைய நிலையங்களாகவும் மாற வேண்டும். ஏனெனில், கல்வித் தகைமையை விட தொழில் தகைமையைக் கொண்டிருந்தால் மட்டுமே தொழில் வாய்ப்பை பெறக் கூடிய நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய உலகமயமாக்கலில் ஒரு மனிதன் மாண்புறுமகனாக திகழ வேண்டுமாகவிருந்தால் கல்வி சார் அதி உயர் அடைவு மட்டங்களை மட்டுமல்லாது உயர் மனித விழுமியங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சுமார் 40,000 கல்வி கற்கின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.அந்தவகையில், திறந்த பல்கலைக்கழகங்கள் பல்தேசிய கம்பனிகளால் முதலீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலத்தையும் கணினி ஆற்றலையும் வழங்கி தொழில் கல்வியை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், இலங்கையில் கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்று பெற வேண்டுமாகவிருந்தால் ஆங்கில மொழி மூல முதுமானிப் பட்டத்தைப் பெற்றிருக்கவேண்டும். இதற்கு ஏற்றாப்போல் திறந்த பல்கலைக்கழகங்கள் தொழில் கல்வியை ஊட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X