2025 மே 14, புதன்கிழமை

'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 10 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா  

இலங்கையில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உட்பட பல கைதிகள் சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்ட நிலையிலுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள்; என்ற சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், இதுவரையில் இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கையும்; எடுக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் எதுவித சாதக நடவடிக்கையும் எடுக்காமை கவலைக்குரியதாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

'தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுவிப்பதாக கடந்த காலத்தில் சில நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதே ஒழிய, அவர்களின் விடுதலை தொடர்பில் கேள்விக்குறியாக உள்ளது.

தங்களின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்களில் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையாலேயே   அவர்கள் மீண்டும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X