Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்துக்கான தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு, குறுமண்வெளிப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக சி.கோகுல்ராஜ், செயலாளராக செ.டிலோஜன், பொருளாளராக வே.லோகுராஜன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக தெ.புவிராஜ், அம்பாறை மாவட்ட இணைப்பாளராக தி.விஜய் ஆகியோருடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் 08 பேர்; தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசிய மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இப்பேரவையின் செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிழக்கு மாகாணத்திலும் அதன் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் மற்றும் நலன் விரும்பிகளின் உதவியுடன் வினைத்திறன் மிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் இந்தப் பேரவையின் செயற்பாடுகள் அமையும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்து, வேண்டப்படாத பல செயற்பாடுகள் முதல் நிலையை அடைந்து வருகின்றது. அவற்றைத் தடுப்பதற்கு கல்வி நிலையை மேம்படுத்தவேண்டிய தேவையுள்ளதாக தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் ஸ்தாபக தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார்.
7 minute ago
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago