Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 மார்ச் 17 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் திருகோணமலை வளாக தமிழ் மாணவர்கள் மீது, சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடாத்திய சம்பவம் கண்டிக்கப்பட வேண்டயதாகும் என்று தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், குறித்த சிங்கள மாணவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
திருகோணமலை வளாக தமிழ் மாணவர்கள் ஒன்பது பேர், சிங்கள மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பாக, நேற்று புதன்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கும் கலாசாரம் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் விடுதியில் உள்ள சிங்கள மாணவர்கள், சகவிடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் மீது 2009ஆம் ஆண்டுக்கு பின் பலமுறை தாக்குதலை மேற்கொண்ட சம்பவங்கள் பல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், இது தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். சில மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை' என்று அவர் கூறினார்.
எனவே, தற்போது இடம்பெற்றுள்ள சம்பவம் போன்று இனிவரும் காலத்திலும் இடம்பெறாது இருக்கவேண்டுமேயானால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago