2025 மே 14, புதன்கிழமை

தமிழ் மொழி மூல பாடசாலைகள் புறக்கணிக்கப்பு : அரியநேத்திரன்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வழக்கப்பட்ட நிதி உதவியில் கிழக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தமிழ் மொழி மூல பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பாடசாலைகளில் ஒரு பாடசாலை மாத்திரமே தமிழ் பாடசாலையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய ஏழு பாடசாலைகளும் முஸ்லிம் பாடசாலைகளாகும்.

குறித்த நிதியானது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான பாடசாலைகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இதனை விடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி 7 க்கு ஒன்று என்ற வீதத்தில் தேர்வு செய்துள்ளார்.

எனவே,இதனை மீள்பரிசீலனை செய்து  பின்தங்கிய தமிழ் மொழி மூல பாடசாலைகளை இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X