2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கற்க வேண்டும்'

Niroshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் மொழியுடன் தமிழர்களின் கலாசாரம் பண்பாடுகள் தமிழர்களின் மரபுகள் இணைந்துள்ளதனால் தமிழ் மொழியின் சிறப்பை மாணவர்கள் உணர்ந்து கற்க வேண்டும் என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வியத்தின் மண்முனை வடக்கு கோட்டத்தின் தமிழ் மொழி தினத்தின் இரண்டாவது நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாஸ்டர் சிவலிங்கம்பிரதம அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது, தமிழ் மொழிக்கும் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவரும் மட்டக்களப்பின் புகழை உலகறியச்செய்தவருமான மாஸ்டர் சிவலிங்கம் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், தமிழ் மொழி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களும் இதன்போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய கோட்டக்கல்வி பணிப்பாளர்,

தமிழ் மொழிக்கு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு உள்ளது.அந்த சிறப்பினை உலகில் உள்ள எந்த மொழிக்கும் அந்த சிறப்பு இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X