2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'தமிழ், முஸ்லிம் பேதமின்றிச் செயற்பட வேண்டியது முக்கியமானது'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 30 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் என்ற பேதம்; இன்றி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது முக்கியமானது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மேலும், இந்த வருடம் கல்வி அபிவிருத்திக்காக புதிய அரசாங்கம் 83 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு இன்று வியாழக்கிழமை வருகைதந்த இராஜாங்க அமைச்சர், அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன் பின்னர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில், 'கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் கல்விக்காக கூடிய நிதி ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல திட்டங்களை முன்வைத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்' என்றார்.

'இவ்வாண்டு நாடு பூராகவும் உள்ள 05 தமிழ்மொழி மூலமான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளிலிருந்து 2,000 ஆசிரியர்கள் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். புதிய ஆசிரியர்கள் சமுதாயத்தை சிறப்பாக வளர்க்க வேண்டும்' என்றார்.

'மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் விரைவில் நிவர்த்தி செய்து தரப்படும்.
இக்காலாசாலையில் காணப்படும் மின்சாரப் பிரச்சினை, தங்குமிடப் பிரச்சினை, கட்டப் பிரச்சினை உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக  முதற்கட்டமாக 05 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய வேலைகளுக்கான செயற்திட்டங்களை சமர்ப்பிக்கும்போது, அவற்றுக்கான நிதி ஒதுக்கப்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X