2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தமிழிழன அழிப்பு இடம்பெற்று வருகின்றது'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் இனப் பெருக்கத்தை கருவிலேயே திட்டமிட்டு அழிக்கும் பாரிய தமிழின அழிப்பு இடம்பெற்று வருகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கே.நலினகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் கே.நந்தகோபனின் 08ஆவது ஆண்டு நினைவுதினம்,  மட்டக்களப்பில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இந்தத் திட்டமிட்ட இன அழிப்பானது மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில்; மிகத் தீவிரமாக இடம்பெறுவதுடன்,  எமது தமிழ் வைத்தியர்;களாலேயே இது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

இந்தத் திட்டமானது ஏற்கெனவே பெருந்தோட்டத்துறைப் பெண்களுக்கு வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டது.  ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை கிடைத்தவுடன் அவரின் அனுமதி இல்லாமலேயே கருவை உருவாக்குவதை தடுக்கும் சத்திரசிகிச்சைகள்; செய்யப்பட்டன.

இன்று இந்த நடவடிக்கையானது பெண்களின் அனுமதியுடன் நவீன முறையில் சிகிச்சை என்ற பெயரில்  கருக்கலைப்புச் சதி வேலை செய்யப்படுகின்றது' என்றார்.

'மேலும், அண்மைக்கால புள்ளிவிவரங்களின் படி மன்னார்; உட்பட சில பகுதிகளிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு 05 வருடங்களில் புதிய மாணவர்;களைச் சேர்;க்க முடியாத  அவல நிலை ஏற்படலாம்.  

இந்தச் சதித் திட்டமானது கிழக்கு மாகாணத்தையும் நோக்கி நகர்;கின்றது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் பிரிவானது  பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும்  நடவடிக்கையை மேற்கொள்ள

வேண்டும்.
எமது தமிழ்ச் சமூகதுக்கான பாரிய சவாலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X