2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'தமிழர்கள் ஏற்கும் அதிகாரப்பரவலாக்கலையே வேண்டுகிறோம்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகூடிய அதிகாரப் பரவலாக்கலை வேண்டி நிற்கின்றோமே தவிர, தனிநாடு கோரவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

வவுணதீவு, கொத்தியாபுலையில் சனிக்கிழமை (10) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள்; ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகூடிய அதிகாரப் பரவலாக்கலையே நாங்களும் வேண்டி நிற்கின்றோம். நாங்கள் தனிநாடு கோரவில்லை. அந்தளவுக்கு நிலைமை ஒரு மாற்றத்திற்குள் வந்துள்ளது' என்றார்.  
'மேலும், 2016ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். தற்போது இதற்கான சமிக்ஞைகளும் காணப்படுகின்றன. நல்லதொரு தீர்;மானத்தை அரசாங்கம் எட்டப் போகின்றதெனவும் அவர் கூறியிருக்கின்றார்.  

சர்வதேசத்தின் பார்வை இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்தை  நம்புகிறோம். அதன் காரணமாகவே சர்வதேசம் இலங்கை அரசாங்கத்துக்கு கட்டளையிடும் அளவுக்கு மாறியுள்ளது' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X