Niroshini / 2016 ஜூலை 30 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல் செய்தவர்கள்தான் மீண்டும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதற்காக பாதயாத்திரையை மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரு மாடிக்களைக்கொண்ட வகுப்பறை கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படும் நாட்டை குழப்பும் பிரிவினர் கண்டியில் இருந்து ஒரு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்துக்கான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுவரும்வேளையில் நாட்டில் இன ஒருமைப்பாடு,சமாதானம் ஏற்படக்கூடாது என்ற வகையில் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள், பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்களே தங்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாங்கள் குற்றவாளிகளாக்கப்படுவோம் என்பதற்காகவும் அதன் காரணமாக நாட்டையும் நாட்டு மக்களையும் திசைதிரும்பி ஆளும் அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் இந்த பாதயாத்திரையை நடாத்துகின்றனர்.
இந்த பாதயாத்திரையை நடாத்துபவர்கள், அதற்காக முன்னிற்பவர்கள் சுத்தமான கொத்தமல்லிகள் அல்ல. நாட்டை குழப்புவதற்காகவே இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்” என்றார்.
12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
30 minute ago
45 minute ago