Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
'பன்மைத்துவம் மிக்க எமது நாட்டைப் பாதுகாப்பதற்கு கடந்தகால அரசியலமைப்பில் இடமிருக்கவில்லை. ஆனால், தற்போதைய நல்லாட்சியில் அதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பன்மைத்துவம் மிக்க நாட்டைப் பிரதிபலிக்கும் அரிசியலமைப்பின் மூலமே இனங்கள் அரசியல் சாசன உரிமை, பர்'பரமான புரிந்துணர்வுடன் வாழ முடியும்.
கடந்த கால கண்டிய இராஜ்யத்தை ஆண்டவர்கள் சமஷ்டியைப் பரிந்துரைத்த வேளையில் அப்போது புறக்கணித்த நாங்கள், இப்போது சமஷ்டியைக் கோருகின்றோம். அப்போது அரசியலில் எமக்கு ஞானம் இருக்கவில்லை' என்றார்.
'எமது அரசியலில் அன்றாட நிகழ்ச்சி நிரல்; படுத்தப்படவில்லை. இது அரசியலில் காணப்படும் பாரிய குறைபாடாகும்.
பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றுபடல், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படல், தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபடல் மூலமே எமது தீர்க்க தரிசனத்துடன் கூடிய எமது சிந்தனைகள் உருப்பெறும்' எனவும் அவர் கூறினார்.
28 minute ago
30 minute ago
38 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
38 minute ago
47 minute ago