Suganthini Ratnam / 2016 நவம்பர் 02 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இவ்வருடம் மத்திய அரசாங்கம் வருமானத்தில் கல்விக்காக 6 வீதத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த நிதியிலிருந்து கிழக்கு மாகணத்திலுள்ள கல்வி அபிவிருத்திக்காக 5400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் 2000 மில்லியன் ரூபாய் மாத்திரம்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள 3400 மில்லியன் ரூபாய் நிதி மீண்டும் மத்திய அரசுக்குத் திரும்பிச் செல்லும் நிலைமை கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட். திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள கல்றல் வள நிலையத்துக்;கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (02); நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில் 'இவ்வருடம் ஓதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் செலவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செலவு செய்யப்படாத நிதி மீண்டும் திறைசேரிக்குத் திரும்பி விடும். அவ்வாறு திரும்பி விட்டாலும் அடுத்த வருடமும் அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி அமைச்சு, திட்டமிடல் பகுதி, மாகாண கல்விப் பணியகம், பாடசாலைகள் சேவைகள் திணைக்களம், போன்ற பல நிர்வாகக் கட்டமைப்பில் எங்கேயோ ஓர் இடத்தில் தவறு நடந்த காரணத்தினால் மத்திய அரசிலிருந்து கல்விக்காக ஒதுக்கீடு செய்த 5400 மில்லியன் ரூபாயில் 3400 மில்லியன் மீண்டும் திரும்பிச் செல்கின்றது இது எமக்கு ஒரு துரதிஸ்ற்ற வசமானதாகும். இதற்கு கிழக்கு மாகாண சபை உண்மையில் பெறுப்புக்கூறித்தான் ஆகவேண்டும்.
கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கில் ஆட்சி அதிகாரதில் பங்கெடுத்து கல்வி அமைச்சையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்திக் கொண்டு வருகின்றது. கல்வியை வளர்த்;தெடுத்தால் ஏனைய சகல வளங்களும் தானாகவே வந்து சேரும்.
கடந்த காலங்களில் போர்ச் சூழலிலே எந்த வித அபிவிருத்தியுமில்லாமல் வாழ்ந்த நாங்கள், தற்போது ஓரளவு நிம்மதியாக பயமுறுத்தல்கள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தலும் அதிகாரங்கள் இன்னும் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை, உரிமைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடா இணைந்திருந்த வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபைக்கு காணி, பொலிஸ், அதிகாரங்கள் உள்ளிட்ட பலவும் பரவலாக்கப்பட்டால், எமது கல்வியை நாங்களே தீர்மானிக்கக் கூடிய அளவிற்கு வளர்த்தெடுக்கலாம்.
கடந்த காலங்களில் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேசத்திலும் கல்வியினால் தமிழன் என்ற பெருமையைக் காப்பாற்றிக் கொண்டிருந்த நாம் இங்கு காணப்பட்ட போர்ச் சூழ்நிலமைகள் காரணமாக தற்போது எமது கல்விமான்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
புரையோடிப்பேயுள்ள எமது பிரச்சனைக்குத் தீர்வு வேண்டியும் ஓர் அரசியல் தீர்வை பெறுவதற்காக நாம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் தீர்வு கிடைக்கும்வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமைக்காகப் பாடுபடும்' என்றார்.
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago