2025 மே 14, புதன்கிழமை

நாம்பன் மாடுகளை திருடியோர் கைது

Administrator   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பக்கியல்ல பிரதேசத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு நாம்பன் மாடுகளை திருடி  விற்பனை செய்த இருவரை வெல்லாவெளி பொலிஸார் இன்று கைது செய்தனர்.

திருடப்பட்ட இரு மாடுகளும் மருதமுனை பிரதேச இறைச்சி வியாபாரி ஒருவருக்கு 26 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றை அறுத்து விற்பனை செய்துள்ளதாகவும் மற்றைய மாட்டை உயிருடன் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பில்,வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X