Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 18 , மு.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளிலும் அடிக்கடி அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டை, நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது தாமதமாகும் என மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களில் ஓர் இயந்திரம் மாத்திரமே இயங்குவதாகவும் மற்றோர் இயந்திரத்தையும் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த இயந்திரமும் இயங்குமாயின், மின்வெட்டு இன்று தொடர்ந்து மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
ஞாயிறன்று இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு விவகாரத்தை எவரும் எந்த வகையிலும் நோக்க முடியும். இருப்பினும், இந்தப் பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்ப்பு வழங்க முடியாது. இப்பிரச்சினை ஏற்பட என்ன காரணம் என்று, பொலிஸாரும் உரிய பிரிவினருமே கூற முடியும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் மற்றுமொரு அசம்பாவிதம் நடக்க முன் காக்கும் நோக்கத்துடனேயே, மின்நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
'ஒருபோதும் நினைக்காத ஒரு சம்பவமே அன்று இடம்பெற்றது. சுனாமி வந்தாற்போன்றது. முதலில், மின்சாரக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம். அதன் பின்னர், இச்சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தொடர்பில் கண்டறிவோம்.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் என்பது, எமக்குக் கிடைக்க வலுவிழந்த குழந்தையாகும். குறைபாடுகள் பலவற்றுடனேயே அது எமக்குக் கிடைத்தது. இருப்பினும், அந்தக் குழந்தையை நாம் எவ்வாறேனும் சீராட்டி, பாலூட்டி வளர்ப்போம். அந்தக் குழந்தையை அன்பாகப் பார்த்துக்கொள்வது தான் எமது கடமை' என்று பிரதியமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையோடு மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் இலங்கையில் மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் மின் விநியோகத்துக்கு இடையில் 500 மெகாவொட் இடைவெளி காணப்படுகிறது என்றும், மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி மேம்பாட்டு இயக்குநர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்புக்கு, நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து 300 மெகாவொட் மின்சாரமே கிடைக்கின்றது. அங்கிருந்து 600 மெகாவொட் மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago