2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர்ப் பிரச்சினைக்குத்; தீர்வு காண்பதற்காக அம்மாகாணத்தில் நாளை புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருகோணமலை -கண்டி வீதியிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண ஆதார சேவை நிலையத்தில் நாளை புதன்கிழமை காலை 9.30 மணி முதல் நடமாடும் சேவை நடைபெறும்.  

மட்டக்களப்பு, கல்லடி விபுலானந்தா ஒழுங்கையிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் அலுவலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் நடமாடும் சேவை நடைபெறும்.

அம்பாறை நகரிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் நடமாடும் சேவை நடைபெறும்.

இதன்போது, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேவையை பொதுமக்கள் பெற முடியுமென்பதுடன், தங்களின் பிரச்சினைகளையும் முன்வைக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட அமைச்சு அதிகாரிகளும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X