2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை இழக்காமலிருக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

நல்லாட்சி அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தராதபோதும், தமிழ் பேசும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எத்தனையோ பாடசாலைகளில் போதிய வசதிகள் இன்றி தகரக்கொட்டகை, ஓலைக் கொட்டகைகளுக்குள் வகுப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
யுத்த காலத்தில் சில பாடசாலைகளில் நிலைகொள்ளத் தொடங்கிய படையினர் இன்னமும் அந்தப் பாடசாலைகளை மாணவர்களிடம் கையளிக்கவில்லை,

மீள்குடியேற்றம் மட்டக்களப்பில் இடம்பெறவில்லை. இராணுவ முகாம்களுக்குள்ளே மக்கள் குடியிருப்புக்கள் இருக்கின்றன. ஆயினும், இன்னமும் மக்கள் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இழக்கவில்லை. கடந்த கால அரசாங்க நடவடிக்கைகளுக்கு புதுப்பொலிவாக மை பூசுவதிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுகின்றது.

இதனை விடுத்து இந்த அரசாங்கத்தைக்; கொண்டுவருவதில் பெரும்பங்காற்றிய தமிழ் பேசும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்த அரசாங்கம் தீவிர அக்கறை காட்ட வேண்டும். காலகாலமாகப் பாதிக்கப்பட்டு வந்த சிறுபான்மை இன மக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்பவற்றைச் சீராக்க வேண்டும். குறிப்பாக, கிழக்கு மாகாணம் பலவகையிலும் புறந்தள்ளப்படுகின்றது.

ஓரக்கண்கொண்டு பார்க்கும் நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் நிறுத்திக்கொண்டு, இன்னும் இந்த அரசாங்கம் விமோசனம் தரும் என்று ஏக்கப்பெருமூச்சுக்களோடு நம்பிக்கை வைத்திருக்கின்ற சிறுபான்மையினரின் நலன்களில்  அக்கறை கொள்ள வேண்டும். அரசியல் யாப்பு மாற்றத்தில் சிறுபான்மையினருக்கும் கௌரவமான தீர்வைப் பெற்றுத் தரும் வழிவகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X