Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு இலகுபடுத்தும் நோக்கோடு பல செயற்றிட்;டங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்;.
அதில் ஓர் அம்சமாக நேற்று வியாழக்கிழமை முதல் கல்முனை பாதை, திருகோணமலை பாதை ஊடாக மட்டக்களப்பை அடையும் மற்றும் ஊடறுக்கும் தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள் அனைத்தும் மட்டக்களப்பு பிரதான தனியார் மற்றும் இ.போ.சபை பஸ் தரிப்பிட நிலையங்களுக்கு சென்று வரவேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பஸ் நிலையம் செல்லாது சில வெளிமாகாண பஸ்கள் பயணிகளை பிரதான பொலிஸ் நிலைய சுற்றுவட்டச் சந்தியில் இறக்கிவிட்டுச் செல்வது தொடர்பாக கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், இதனை நிவர்த்தி செய்வதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்பட்டன. ஆனால், தற்போது மாகாண போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளும் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளும் மற்றும் மட்டக்களப்பு பொலிஸாரும்; இணைந்து செயற்பட்டு களத்தில் நின்று அனைத்து பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களுக்கும் பஸ் நிலையம் சென்றுவர முதற்கட்டமாக அறிவுரை வழங்கினர்.
இனி இவ்வாறு மட்டக்களப்பு பிரதான தனியார் மற்றும் இ.போ.சபை பஸ் நிலையங்களுக்கு சென்றுவராத பஸ்கள் தொடர்பாக அறியப்படுமிடத்து அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்;.

29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago