2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

6 பேரை தாக்கியவரின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கட்பட்ட தும்பங்கேணி, சுரவணையூற்றுப் பகுதியில், மனைவி உட்பட 5 பேரை மண்வெட்டியால் தாக்கிய குடும்பத் தலைவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வி முன்நிலையில், நேற்று  வியாழக்கிழமை (04), மேற்படி சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட பொதே, அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டார்.

கடந்த 28ஆம் திகதியன்று மாலை மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X