2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ஆம் ஆண்டு  டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இருவரும் இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி எம்;.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X