Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் 10 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் து|;பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது நண்பியின் வீட்டுக்கு இச்சிறுமி திங்கட்கிழமை (26) மாலை விளையாடுவதற்குச் சென்றுள்ளார். இதன்போது, நண்பியின் தந்தை இச்சிறுமியை அவரது வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோரிடம் இச்சிறுமி தெரிவித்ததை அடுத்து, காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, சிகிச்சைக்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago