2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'பட்ஜெட் பயனுடையதாக அமைய வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் வரவு -செலவுத்திட்டத் தயாரிப்பானது வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் நோய்களுக்குரிய தடுப்பு நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு பயனுடையதாக அமையவேண்டுமென ஆசியமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தை உள்ளூராட்சிமன்றங்கள் தயாரிப்பது தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக மண்டபத்தில்  இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளன. இவைகளுக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் வழிகாட்டலிலும் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களின் ஊடாகவும் நிதி முகாமைத்துவம் தொடர்பாக ஆசியமன்றம் பல வழிகாட்டல் செயலமர்வுகளை கடந்த காலத்தில் நடத்தியது.

இதற்கு மேலதிகமாகவும் எதிர்காலத்தில் நல்லாட்சி வள நிலையங்களினூடாகவும் உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாட்டை பலப்படுத்த ஆசியமன்றம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஆசியமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சித்திணைக்களத்தின் கணக்காளர் ஏ.உதயராஜன் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .