2025 மே 26, திங்கட்கிழமை

'பட்டிப்பளையிலுள்ள ஆசிரியர் மத்திய நிலையம் இயங்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

பட்டிப்பளைக் கிராமத்தில் பொலிஸ் நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆசிரியர் மத்திய நிலையத்தை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி மகிழடித்தீவில் திங்கட்கிழமை (8) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள் பலவற்றில் இராணுவ நிலையங்களும் பொலிஸ் நிலையங்களும் அமையப் பெற்றுள்ளன.

இந்நிலையில், பட்டிப்பளையிலுள்ள ஆசிரியர் மத்திய நிலையமானது,  பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது, இந்தக் கட்டடத்திலிருந்து பொலிஸார் வெளியேறி, மேற்படி ஆசிரியர் மத்திய நிலையத்தை இயங்கச் செய்வதற்கு வழிவிட வேண்டும். இதற்கான வேலையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X