Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
எதிர்காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (28) மாலை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது' என்றார்.
'மாகாண சபைகளுக்கு அதிகளவான அதிகாரங்கள் கிடைக்கும்போது, பல்வேறு விடயங்களைச் சாதிக்ககூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் மிகவும் கீழ் நிலையில் உள்ளது.
நியம உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரங்கள், மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களுக்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்களுக்கு இல்லாத அதிகாரங்கள், ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்படும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்கான அதிகாரங்களை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு பொறுப்புகள் நிதி வசதி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன' எனவும் அவர் கூறினார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago