Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்; காங்கிரஸும் இணைந்த மாகாண நிர்வாகம் நடைபெறுகின்றது. இந்நிலையில், இம்மாகாணம் தொடர்பான திட்டங்களை மாகாண சபை சரியாக எடுக்கும்போது, அவற்றைச் செய்ய முடியாத வகையில் நிர்வாகத் தடங்கல் உள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
நிர்வாகத் தடங்கலை நீக்குவதற்கு சில நடவடிக்கைகளைக் கையாண்டால், அதை அரசியல் பழிவாங்கல் எனக் கொள்கின்றனர். எனினும், அவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு தாம்; விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
சிறுதேன்கல் சித்தி விநாயகர் வித்தியாலய புதிய கட்டடத்துக்கு புதன்கிழமை (14) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் உரையாற்றுகையில், 'அதிகாரிகள் தங்களின் அறிவுபூர்வமான நடத்தைகளின் மூலம் வெளிக்காட்டல்களைச் செய்தாலும் கூட, செயற்பாடுகளுக்கு தடங்கலை ஏற்படுத்தக்கூடிய நிலைமை இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து ஆகும். இதை விளங்கிக்கொள்ள வேண்டியவர்கள் விளங்கிச் செயற்பட வேண்டும்' என்றார்.
'எமது மாகாணத்துக்குரிய விடயங்களை மாகாண நிர்வாகம் கையாள்வதில் சிக்கல் உள்ளது. மாகாணத்துக்குரிய விடயத்தை மாகாண நிர்வாகமே கையாள வேண்டும். அதில் மத்திய அரசியலாளர்களையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும். அதுவும் முக்கிய விடயம் என்னவெனில், ஒரு சாரார் மற்றைய சாராரைப் புறக்கணிப்பது என்பது சிறந்த அரசியல் நாகரிகத்தை உருவாக்காது.
இதற்கு முன்னுள்ள ஆட்சியில் அரசியல்வாதிகளுக்கு; அளவுக்கு அதிகமாக கௌரவம் அளிக்கப்பட்டது. அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம், முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தோம். ஆனால், அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தை, அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்களின் ஆணை, த.தே.கூ. க்கே உள்ளது. எனவே, மக்களின் ஆணையைப் பெற்ற அரசியலாளர்களைப் புறக்கணித்து விட்டு, அதிகாரிகளின் செயற்பாடுகள் தெரிந்தோ, தெரியாமலோ இடம்பெறக் கூடாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago