Suganthini Ratnam / 2016 ஜூலை 01 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்.
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 08 அடி முதல் 12 அடிவரையான 14 முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டியவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரங்களை விட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே மேற்படி மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago