Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்
தங்களுடைய மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், அப்பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலைமையில் கிரான் றெஜி மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது, மேற்படி கோரிக்கையை முன்வைத்து பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், 'தாம் தொடர்ச்சியாக இந்ந விடயம் தொடர்பான நடவடிக்கையில் இப்பிரச்சினையை எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாமல் உள்ளதுடன், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் தேவை ஆகும்' என்றார்.
இதன் பின்னர் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில், பாரம்பரிய மேய்சல்தரையாகப் பாவிக்கப்பட்டுவந்த பிரதேசமானது, இப்போது பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை, குறித்த மேய்ச்சல்தரையில் நுழையும் தங்களுடைய கால்நடைகள் அவர்களால் கொல்லப்படுவதும் அதேநேரத்தில் கட்டப்பட்டு தண்டப்பணம் கோருவதும் இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதுடன், பாரிய நட்டமும் ஏற்பட்டுள்ளதாக மாதவணை, மயிலத்தமடு பிரதேசங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள வரும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago