Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 07 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகப் புதிய அரசாங்கத்தை கொண்டுவந்தோம். ஆனால், புதிய அரசாங்கத்திலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை' என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி செய்தாலும் சரி, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆட்சி செய்தாலும் சரி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
காத்தான்குடி ஜாமியத்துல் ஜமாலிய்யா அரபுக் கல்லூரியில் மர்ஹும் மீரான் முபீன் ஆலீம் மண்டபத் திறப்பு விழா சனிக்கிழமை (6) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பல்வேறு பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகமானது பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. அச்சூழ்நிலையில், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், தற்போதும் அதே நிலைமையிலேயே முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
எனவே, ஆட்சியை மாற்றுவது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமைய மாட்டாது' என்றார்.
'எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின், நாங்கள் அதிகாரத்தைக் கொண்டதொரு சமூகமாக மாற வேண்டும்.
முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுடன், எங்களுடைய ஒற்றுமையில் எமது சமூகத்தின்; பாதுகாப்புத் தங்கியிருக்கின்றது.
இந்த அரசாங்கத்தை மாற்றுவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதுடன், இந்த அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கொண்டதாக சமூகமாக நாங்கள் மாற வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகமானது அதிகாரத்தைக் கொண்ட சமூகமாக மாறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப் பலப்படுத்தி, அவருடன் இணைந்துகொண்டு, எங்களின்; பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ், எமது சமூகமானது ஒன்றிணையா விட்டால், எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025