Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மார்ச் 14 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
அறவழிப் போராட்டங்களிலும், அரசியல் பிரச்சாரங்களிலும் அமிர்தலிங்கத்துடன் முன்னின்று உழைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
லண்டனில் மரணமான திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் கே.ராஜேந்திரா விடுத்துள்ள அவ் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக தந்தை செல்வாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தளபதியாக விளங்கிய அமிர்தலிங்கம் அவர்களை கரம் பற்றி அந் நாள் முதல் தலைவனுடன் இணைந்து தன் வாழ்வையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர்.
அறவழிப் போராட்டங்களிலும் அரசியல் பிரசசாரங்களிலும் முன்னின்று உழைத்தவர் அன்னாரின் மறைவுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago