2025 மே 13, செவ்வாய்க்கிழமை

190 மதுபான போத்தல்கள் மீட்பு:மூவர் கைது

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன், எம்.எஸ்.எம். ஹனீபா

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வௌ;வேறு பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை கடத்திச் செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 3 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூவரிடமிருந்து  பெருந்தொகையான மதுபானத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏறாவூர் புகையிரத நிலையத்தடியில், முச்சக்கரவண்டியில் 750 மில்லி லீற்றர் கொண்ட 25 மதுபான போத்தல்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

ஏறாவூர் தளவாய்ப் பகுதியில் வைத்து 180 மில்லி லீற்றர் கொண்ட 95 மதுபான போத்தல்களை வைத்திருந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, புன்னைக்குடா வீதியில் 180 மில்லி லீற்றர் கொண்ட 70 மதுபான போத்தல்களை வைத்திருந்த 20 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டார்.

இந்த மூவரும் நள்ளிரவில் இந்த சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X