2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மதுபானச்சாலைகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 08 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகப்; பிரிவில் காணப்படும் மதுபானச்சாலைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  அப்பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், மதுபானச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலகத்தில் வருடாந்தம் புதுப்பிக்கும்;போது, அவை தொடர்பில் பிரதேச செயலாளர் பரிசீலிக்குமாறும்  குறித்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் மீளாய்வுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றபோதே, பொது அமைப்புகள் இந்தக்  கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.  

அங்கு பொது அமைப்புகளைச் சேர்ந்தோர் தெரிவிக்கையில், 'இப்பிரதேச செயலகப் பிரிவில் கிரான்குளம் பிரதேசம் முதல் ஆரையம்பதிப் பிரதேசம்வரையில் மதுபானச்சாலைகள் மற்றும் மதுபானம் விற்பனை செய்யும்; ஹோட்டல்கள் 07 இயங்குகின்றன. 800 பேருக்கு ஒரு மதுபானச்சாலை என்ற அடிப்படையில் இயங்குகின்றன. இவ்வாறான மதுபானச்சாலைகள் காரணமாக இங்கு பாரிய சமூகச் சீர்கேடுகள்  நிலவுகின்றன.

ஆரையம்பதிப் பிரதேச பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள மதுபானச்சாலை உட்பட மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மதுபானச்சாலைகளை மூன்றாகக் குறைக்கவேண்டும்' என்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X